Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஏஐ கட்டமைப்பில் ரூ.4,350 கோடி முதலீடு

ஏஐ கட்டமைப்பில் ரூ.4,350 கோடி முதலீடு

டாடா கம்யூனிகேஷன்ஸ் பங்கு உயர்வு

பகிரவும் WhatsApp Facebook

செயற்கை நுண்ணறிவு நெட்வொர்க் கட்டமைப்பில் சுமார் ரூ.4,350 கோடி முதலீடு செய்யப்போவதாக டாடா கம்யூனிகேஷன்ஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 26 வர்த்தகத்தில் அதன் பங்கு 1.62 சதவீதம் உயர்ந்து ரூ.1,681.20-இல் நிறைவடைந்தது.

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்நிறுவனம், இந்தியாவின் முக்கிய தரவு மையங்களையும் செயற்கை நுண்ணறிவு மையங்களையும் இணைக்கும் வகையில் ‘ஏஐ சூப்பர் ஹைவே’ திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக சுமார் 10,000 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய நீண்டதூர ஒளியிழை வலையமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதல்கட்டத்தில் மும்பை, புனே, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்கள் இணைக்கப்படும். அடுத்தடுத்த கட்டங்களில் விசாகப்பட்டினம், புவனேஸ்வர், ஜாம்நகர், கிஃப்ட் சிட்டி உள்ளிட்ட வளர்ந்துவரும் தரவு மையப் பகுதிகளுக்கு இணைப்பு விரிவுபடுத்தப்படும்.

இந்தியாவில் தரவு மையங்களுக்கு இடையிலான இணைப்புச் சந்தை, நடுத்தர காலத்தில் 100 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டும் வாய்ப்புள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கணேஷ் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தளங்கள், கிளவுட் சேவை நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் அதிகரிக்கும் தரவுப் பரிமாற்றத் தேவையைப் பூர்த்திசெய்வது திட்டத்தின் நோக்கமாகும். அதிவேகம், குறைந்த தாமதம், அதிக கொள்ளளவு மற்றும் நம்பகமான இணைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

புதிய வலையமைப்பு, நிறுவனத்தின் உலகளாவிய நெட்வொர்க்குடன் ஒருங்கிணைக்கப்படும். சர்வதேச கடலடிக் கேபிள் இணைப்பு நிலையங்கள் வழியாக இந்தியத் தரவு மையங்கள் உலகின் முக்கிய ஏஐ மையங்களுடன் இணைக்கப்படும்.

முக்கிய வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்ற ஒப்பந்த அடிப்படையிலான விரிவாக்கத்துக்கு ஆதரவளிப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவை உலகளாவிய ஏஐ மற்றும் கிளவுட் இணைப்பு நுழைவாயிலாக வலுப்படுத்த இந்த முதலீடு உதவும் என டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
IDFC FIRST வங்கி லாபம் 196.5% உயர்வு
அடுத்த செய்தி
தனலட்சுமி வங்கியின் லாபம் இரட்டிப்பானது

தொடர்புடைய செய்திகள்